’நேர்கொண்ட பார்வை’ ட்ரெயிலரின் அந்த வசனம் விஜய் ரசிகர்களுக்காக எழுதப்பட்டதா?

  0
  1
  நேர்கொண்ட பார்வை

  பிங்க்’பட ரீமேக் செய்திகள் வந்த துவக்கத்தில், அமிதாப் வயதான வேடத்தில் நடித்திருப்பதால் அதே கேரக்டரை அஜீத் செய்யவேண்டுமா என்ற விவாதங்கள் துவக்கத்தில் இருந்தன.

  நேற்று மாலை வெளியான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெயிலரை இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்திருக்கின்றனர். அதை விட இன்னொரு அதிசயம் அந்த ட்ரெயிலருக்குக் கீழே 42ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கமெண்டுகள் இடம் பெற்றிருப்பது.

  np

  ’பிங்க்’பட ரீமேக் செய்திகள் வந்த துவக்கத்தில், அமிதாப் வயதான வேடத்தில் நடித்திருப்பதால் அதே கேரக்டரை அஜீத் செய்யவேண்டுமா என்ற விவாதங்கள் துவக்கத்தில் இருந்தன. ஆனால் அதைத் தவிடுபொடியாக்கும் வகையில் இந்த ட்ரெயிலர் அமைந்துள்ளது.  அஜித்தின் தோற்றம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம ஸ்டைலாக இருக்கிறது. கருப்பு கோட்டில் ஸ்டைலும், அழகும்! ப்ப்பா…  கோர்ட்டில் ஷ்ரத்தாவைப் பார்த்து ’ஆர் யூ வெர்ஜின்? நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியுதா மிஸ் மீரா? அதாவது நீங்க கன்னித் தன்மையோட இருக்கீங்களா? என தல பேசும் ஸ்டார்டிங் பன்ச் டயலாக்கும்,  வெறித்தனமான வாதமும், அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகளும் ஹெச்.வினோத் மிகச் சரியான தேர்வு என்று சொல்லவைக்கின்றன.

  np

  ’ஐயய்யோ கோர்ட் காட்சிகள் என்றால் போரடிக்குமே’ என்று இன்னொரு அபிப்ராயமும் இருந்தது. “ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக  இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க? என்ற அஜீத்தின் ஒரே வசனம் அந்த சந்தேகத்தைத் தூக்கி அடித்துவிடுகிறது. அந்த வசனம் தான் நேற்று வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பஞ்ச் டயாக்.

  அமிதாப்புடன் கண்டிப்பாக அஜீத்தை ஒப்பிடக்கூடாது என்றாலும் பிங்கில் கொஞ்சம் சோர்வாகவே கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும் அவரை, அஜீத் தந்து எனர்ஜெடிக் கேரக்டரால் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்

  np

  படத்தின் இன்னொரு பாஸிடிவ் அம்சமான யுவனின் இசை. டிரைலரின் டெம்போவை செமயாகக் கூட்டுகிறது. மறுபடியும் ஒரு மங்காத்தா ஆடுவார்கள் போல் தெரிகிறது. நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும் இதுவரை பார்க்காத ஒரு அட்டகாசமான அஜீத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.

  np

  வழக்கம்போல் ஒரே ஒரு துயரம்தான்…”ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக  இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க?  என்ற வசனம் விஜய் ரசிகர்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது என்று ஒரு சிலர் கொளுத்திப்போட ஆரம்பித்திருக்கிறார்கள்.