நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் இல்லையாம் பா…!

  0
  1
  தல அஜித்

  சென்னை: நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

  தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார் வித்யா பாலன். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இந்த நிலையில் படத்தை முதலில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்ட படக்குழு பிறகு, ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து படத்தின்  போஸ்டர்கள், டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

  ajith

  இந்த நிலையில் தற்போது படத்தை முன்கூட்டியே வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக் கிழமை நேர்கொண்ட பார்வை ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.இதைக் கேட்ட தல ரசிகர்கள்  மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.