நேர்கொண்ட பார்வை: அஜித்துக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா- ஜோதிகா ஜோடி! 

  0
  2
  சூர்யா - ஜோதிகா-அஜித்

  நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பை பார்த்து சூர்யா – ஜோதிகா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பை பார்த்து சூர்யா – ஜோதிகா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களைப் பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை செய்து வருகிறது. 

  ஒரு பெண் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோ என்று அஜித் பேசிய வசனம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது. இதில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

  gift

  அந்த வகையில் இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து சமீபத்தில் பார்த்துள்ளனர். படம் பேசிய கருத்தும் அஜித் நடிப்பும் அவர்களை வெகுவாக கவர்ந்ததால் தல அஜித்துக்கும், படத்தின் இயக்குநர் வினோத்திற்கும் பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அவர்கள் அனுப்பிய பூங்கொத்து புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.