நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து – லாரி: 13 பேர் பரிதாப பலி!

  0
  6
  திருப்பூர்

  கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி அந்த பேருந்து மீது மோதியது.  இதில் 3 பெண்கள் உள்பட 13 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

  திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசின்  சொகுசு பேருந்து ஒன்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில்  கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி அந்த பேருந்து மீது மோதியது.  இதில் 3 பெண்கள் உள்பட 13 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

  ttn

  இதை தொடர்ந்து விபத்தில் பலியானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  ttn

  இதேபோல்  சேலம் மாவட்டம் ஓமலூர் நரிப்பள்ளம் அருகில்  சுற்றுலா பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 5 பேர் பலியாகினர். மேலும் 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்   சுற்றுலாவுக்கு வந்த நேபாளத்தைச் சேர்ந்த பயணிகள் என்பது தெரியவந்துள்ளது.