நெல்லை பாரதி மரணத்தின் மூலம்  சில முக்கியச் செய்திகளை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்- வைரமுத்து!

  0
  4
  வைரமுத்து

  தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி உடல் நலக்குறைவால் காலமானார். சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேச்சாளர், பாடலாசிரியர் என இவருக்கு பல முகங்கள் கொண்ட இவரின் இழப்பு பத்திரிக்கையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Nellai bharathi

  நெல்லை பாரதியின் மரணம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தியில், “நெல்லை பாரதி என் பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களுள் ஒருவர். அவரின் இழப்பு என்னைக் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இறப்பதற்கான வயதும், காரணமும் என் கவலையைக் கூட்டுகின்றன. சில நாட்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார் பாரதி. ஒரு ஆவணப்படத்திற்காக என்னைப் பேசச் சொன்னார். சர்க்கரை நோயால் ஒரு காலை இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறார் என் பாரதி; ஆனாலும் சொந்தக் காலில் நிற்கிறார் என்று சொன்னேன். பாரதி தன் மரணத்தின் மூலம் சில முக்கியச் செய்திகளை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். சர்க்கரை நோய் இருந்தால் உடல் குறித்து அக்கறை இருக்க வேண்டும். கொரானாவை விடக் கொடியது மது. இந்தப் பாடத்தை தன் சமூகத்திற்கு விட்டுப் போயிருக்கிறார் பாரதி. இது மறைந்தவரை குறைத்துச் சொல்வதற்கு அல்ல. இருப்பவரை மதித்துத் சொல்வது. பாரதியை இழந்து தவிக்கும், குடும்பத்தாருக்கும், பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.