“நெட் கனெக்ஷன் விட்டு விட்டு வருது “-புகார் கொடுத்தவரின் நிலைமை என்னாச்சி தெரியுமா அண்ணாச்சி? 

  0
  1
  REp Image

  அசர்வாவில் வசிக்கும் 35 வயதான சத்னம்சிங் சலுஜா என்பவர் மேகநநகரில் ஒரு மொபைல் போன் கடையை நடத்தி வந்தார், இந்த ஆண்டு ஜனவரியில் தன் கடையில்  இணைய இணைப்பை நிறுவினார்.
  ஆனால்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரின் கடையில்  இணையம் துண்டிக்கப்பட்டது,

  குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் சத்னம்சிங் சலுஜா என்ற நபர் தன் கடையில் இணைய இணைப்பு மோசமாக இருப்பதாக புகார் கூறியதால்  ​இணைய  கம்பெனி ஊழியர்கள் மூன்று பேரால் தாக்கப்பட்டு இறந்தார்.
  அசர்வாவில் வசிக்கும் 35 வயதான சத்னம்சிங் சலுஜா என்பவர் மேகநநகரில் ஒரு மொபைல் போன் கடையை நடத்தி வந்தார், இந்த ஆண்டு ஜனவரியில் தன் கடையில்  இணைய இணைப்பை நிறுவினார்.
  ஆனால்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரின் கடையில்  இணையம் துண்டிக்கப்பட்டது, உடனே சத்னம்சிங் சலுஜா உள்ளூர் சேவை வழங்குநர் விஷால் பட்னியை தொடர்பு கொண்டு இணைப்பை மீண்டும் நிறுவினார், ஆனால் இணைய தொடர்பு சரியாக வேலை செய்யவில்லை. அதனால் மீண்டும் அவர் இணைய நிறுவனத்திடம் புகாரளித்தார். இதனால் உள்ளூர் சேவை வழங்குநர் பட்னியும் அவரது மூன்று கூட்டாளிகளும் சலூஜாவின் வீட்டிற்கு சென்று இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்டனர்.

  அப்போது சலூஜா இணைய இணைப்பு மோசமாக இருப்பதாக புகார் கூறியபோது, அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. ​​அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இணைய ஊழியர்கள் மூன்று பேரும் சலூஜாவை துஷ்பிரயோகம் செய்து தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சலூஜா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.