நுங்கம்பாக்கத்திற்கு அடுத்த ஸ்டேஷன் சேத்துப்பட்டில் அடுத்த அரிவாள் வெட்டு!

  0
  3
  Chetpet Railway station

  வெட்டுப்பட்ட தேன்மொழி படுகாயங்களுடனும், ரயிலில் மோதிய சுரேந்தர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வெட்டியது யார் என்று அடையாளம் காணப்பட்டுவிட்டது. பிலால் மாலிக்குகள் நிம்மதியாக இருக்கலாம்.

  “பயணிகள் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். காதலர்கள் தங்கள் ஊடலை வீட்டில் உறவினர்கள் அல்லது நண்பர்கள் முன்னிலையில் பேசி தீர்த்துக்கொள்ளவும். பேசவும், பிரியவும், சண்டை போட்டுக்கொள்ளவும், வெட்டி சாய்ப்பதற்கும் ரயில்வே ஸ்டெஷனை பயன்படுத்த வேண்டாமென தெற்கு ரயில்வே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறது” என ரயில்வே ஸ்டேஷன்களில் இனி அறிவிப்பு இந்தி, தமிழ், ஆங்கிலம் என மாறிமாறி வரும் என எதிர்பார்க்கலாம். ஏன்னு கேட்டீங்கன்னா, இது ரயில்வே ஸ்டேஷனா இல்ல கொலைகளமா என தெரியாத அளவுக்கு ஸ்டேஷன்களில் கொலைகளும் கொலைமுயற்சிகளும் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.

  Nungampakkam station murder

  இந்த மாதம் ஜூன் 24ஆம் தேதி வந்தால், நுங்கம்பாக்க ரயில்வே ஸ்டேஷனில் பிலால் மாலிக் என்கிற ராம்குமாரால், சுவாதி கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இந்த கொடூர கொலையை நினைவுபடுத்தும்வகையில், நுங்கம்பாக்கத்திற்கு அடுத்த நிறுத்தமான சேத்துப்பட்டில் நேற்று ஒரு கொலை முயற்சி நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் களியங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த தேன்மொழி, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தார். சுரேந்தர் என்பவருக்கும் தேன்மொழிக்கும் இடையேயான காதல் பிரச்னையை பேசி தீர்க்கும் பஞ்சாயத்து ஆலமரமாக, சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷனை தேர்ந்தெடுத்து நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். பேச்சு விவாதமாகி, விவாதம் சண்டையாகி, சண்டை வன்முறைக்கு தாவ, சுரேந்தர் தன்னிடம் இருந்த அரிவாளால் தேன்மொழியை வெட்டிவிட்டு, தண்டவாளத்தில் வந்த ரயில் முன்னால் விழுந்திருக்கிறார்.

  Chetpet Murder attempt

  வெட்டுப்பட்ட தேன்மொழி படுகாயங்களுடனும், ரயிலில் மோதிய சுரேந்தர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வெட்டியது யார் என்று அடையாளம் காணப்பட்டுவிட்டது. பிலால் மாலிக்குகள் நிம்மதியாக இருக்கலாம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அங்கே பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் இருவரும் சத்தமாக பேசுவதைப் பார்த்து எச்சரிக்கை செய்திருக்கிறார். தனக்கு தமிழ் தெரியாததால், அவர்கள் உக்கிரமாக‌ சண்டை போடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை, அதனால்தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். ம்ம்ம்ம்.