‘நீ மூணு புருஷன கல்யாணம் பண்ணிருக்கியே அது சரியா? : வனிதாவை விளாசும் முன்னாள் பிக்பாஸ் பிரபலம்!

  0
  4
  வனிதா

  மதுமிதாவை பார்த்து நீ கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வரேன்னு சொல்லுறாங்களே அது எவ்ளோ பெரிய தப்பு.

  மதுமிதாவை கேள்வி கேட்குற வனிதாவை பார்த்து நீ மூணு புருஷன கல்யாணம் பண்ணிருக்கியேன்னு கேட்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நடிகை காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

  vanitha

  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஒரே சண்டையும் சச்சரவுமாக உள்ளது. குறிப்பாக அமிராமி வாட்டர் பாட்டிலை முகேன் ராவ்வுடன் எனக்கு பிறந்த குழந்தை என்று சொல்ல, அதை கேட்ட மதுமிதா  தமிழ் பொண்ணு நான். எங்க வீட்ல இதையெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க என்று கூற சண்டை வெடித்தது. இதுஒருபுறமிருக்க இந்த விஷயத்தில் பஞ்சாயத்து செய்கிறேன் என்ற பெயரில், ருத்ரத்தாண்டவம் ஆடிய வனிதா விஜயகுமார் மதுமிதாவை பார்த்து, நீ கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வருவாங்களாம், பாட்டில்  வச்சிட்டு விளையாடுறது மட்டும் தப்பாம் என்று கண்டமேனிக்கு திட்டி தீர்த்தார். 

  kajal

  இந்நிலையில் இதுகுறித்து சாண்டியின்  முன்னாள் மனைவியும் நடிகையுமான நடிகை காஜல் கேள்வி  எழுப்பியுள்ளார். இதுகுறித்து  அவர் பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், வனிதா ரொம்ப ஓவரா பேசுறாங்க. மதுமிதாவை பார்த்து நீ கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வரேன்னு சொல்லுறாங்களே அது எவ்ளோ பெரிய தப்பு. அப்போ கூட மதுமிதா மத்ததெல்லாம் பேசுறாங்களே தவிர வனிதாவோட பெர்சனல் லைஃப்  பத்தி பேசல. எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சி. கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வரேன்னு சொல்லுறாங்களே அவங்கள பார்த்து நீ மூணு புருஷன கல்யாணம் பண்ணிருக்கியேன்னு கேட்க எவ்வளவு நேரம் ஆகும். இத அவங்க யோசிக்க வேணாம். நானா இருந்தா கண்டிப்பா கேட்டுருப்பேன். எனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. வனிதாவுக்கு நல்லநேரம் நான் உள்ளே போகல’ என்று தடாலடியாக பேசியுள்ளார்.