‘நீ என்ன நினச்சாலும் கவலையில்ல’ : பிக் பாஸ் அமிராமியின் திடீர் பதிவு!

  21
  பிக் பாஸ் அமிராமி

  முதலில் முகினை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார்

  பிக் பாஸ் 3யில் பெரிதாகப் பேசப்பட்ட காதல் ஜோடிகளுக்குள் முக்கியமானவர்கள் முகின் – அபிராமி. முதலில் முகினை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதால் முகின் அவர் காதலை மறுத்துவிட்டார். 

  abi

  இருப்பினும் விடாமல் முகினை காதலித்து வந்ததால் வீட்டிற்குள் பூகம்பம் வெடித்து பின்பு  நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  

  abi

  வெளியே வந்த பிறகும் முகினை மறக்காமல் அவர் குறித்து ஏதாவது ஒரு பதிவிட்டு வந்தார். ஆனாலும் முகின் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இருப்பினும் விளம்பரங்கள், படங்கள் என பிஸியாக  வலம்வருகிறார் அபிராமி 

  இந்நிலையில் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நீ என்ன நினச்சாலும், கவலையில்ல. நான் பிறந்த மண்ணையும் ஆண்டவன் இருக்கும் விண்ணையும் மட்டுமே நம்பி வாழும் நான்’ என்று பதிவிட்டுள்ளார்.