நீ அவனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டுற: சாண்டியை கேள்வி கேட்கும் லாஸ்லியா; வேடிக்கை பார்க்கும் கவின்

  0
  8
  பிக் பாஸ் 3 தமிழ்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  sandy

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகினும் வெற்றி பெற்றார்கள். மேலும் நேற்று நடந்த  டாஸ்கில் முகின் மற்றும் சேரன் வெற்றி பெற்றனர்.  

   

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியா சாண்டியிடம், இந்த கேம் நடக்கும் போது  நீ இவனுக்கு 7வது குடுத்தல, அது பாயிண்ட்ஸ் வரபோற கேம். அவன் இப்போ விளையாடனும் இருக்கான். அவ்ளோ விஷயம் நடந்த பிறகும்.. எனக்கு 7வது குடுத்துஅவனுக்கு 6வது குடுத்திருந்தா கூட நல்ல இருந்திருக்கும். அதுக்கு பிறகு நீ பலூன் உடைச்சல, இவனோடது நீ ஏன்  உடைச்ச; அவன் க்ளோஸ் பிரெண்டுன்னு நீ நெனைக்குற அப்படினா என்று சொல்லும் போதே,  ‘அந்த வார்த்தையை விடாத’ என்று சாண்டி கோபப்படுகிறார். அதற்கு லாஸ்லியா,  நீ அவனுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணனும் என்று மீண்டும் சொல்ல, கடுப்பான சாண்டி  ஒன்னு என்ன பேசவிடனும், இல்ல நீ பேசிட்டு போயிடனும் என்று சொல்ல, சரி சொல்லு என்று சொல்கிறார் லாஸ்லியா. இந்த விவாதம் நடைபெறும் போது  கவின் அமைதியாக நின்று வேடிக்கை பார்க்கிறார்.