நீருக்குள் கர்ப்பிணியாக நடிகை சமீரா ரெட்டி …வைரல் போட்டோஸ்!

  0
  4
  சமீரா ரெட்டி

  இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சமீராவுக்கு மும்பையில் பெண் குழந்தை பிறந்தது.

  தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.  அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும்  மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து சமீரா இரண்டாவது முறையாகக் கர்ப்பமானார்.

  ttn

  கர்ப்பிணியாக இருக்கும் போதே  அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார்.  இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சமீராவுக்கு மும்பையில் பெண் குழந்தை பிறந்தது.

  ttn

  இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்ப்பிணியாக நீருக்குள் போட்டோஷூட்  எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் உடல் எந்த அளவில் இருந்தாலும் அதை மதியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.