நீரவ் மோடி பட்டை நாமம் சாத்திய பஞ்சாப் நேஷனல் வங்கியின் சோகம்…….

  0
  4
  பஞ்சாப் நேஷனல் வங்கி

  பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர இழப்பாக ரூ.492 கோடியை சந்தித்துள்ளது.

  பொதுத்துறை வங்கியான பஞ்சாய் நேஷனல் வங்கிக்கு கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர இழப்பாக ரூ.492 கோடி ஏற்பட்டுள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் பஞ்சாய் நேஷனல் வங்கி  ரூ.246.51 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது.

  பஞ்சாப் நேஷனல் வங்கி

  2019 டிசம்பர் காலாண்டில் பஞ்சாய் நேஷனல் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.4,355.05 கோடியாக உயர்ந்துள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் அந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.4,290.05 கோடியாக இருந்தது. மேலும் 2019 டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ.76,809.20 கோடியாக குறைந்துள்ளது.

  நீரவ் மோடி

  பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது மாமா சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு அதனை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடினர். நீரவ் மோடி தற்போது இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இங்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.