நீதிமன்ற தீர்ப்பு அவமதிப்பு : ஆவின் நிர்வாகிக்கு பிடிவாரண்ட்

  9
  பிடிவாரண்ட்

  கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் உரியக் கட்டணம் செலுத்தி ஆவின் அடையாள அட்டையை வாங்கியுள்ளார்.  

  தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில்  எந்த ஒரு தனி நபரும் கட்டணம் செலுத்தி உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள முடியும். அதே போல, கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் உரியக் கட்டணம் செலுத்தி ஆவின் அடையாள அட்டையை வாங்கியுள்ளார்.  

  aavin

  அடையாள அட்டை வாங்கிய பிறகும், ஆவின் விற்பனையாளர் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்பட வில்லையாம் . இது குறித்து, ஆவின் நிர்வாகத்திடம் கூறியும் அங்கு எந்த வித பதிலும் கிடைக்காததால் அன்பழகன் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் சேவை குறைபாடு என்று வழக்குப் பதிவு செய்துள்ளார். 

  court

  அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அன்பழகனுக்கு ரூ. 5000 நிவாரண நிதியும், ரூ. 3000 செலவுக்காகவும் வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகிக்கு உத்தரவிட்டது. இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பணம் வழங்கப்படாததால் அன்பழகன் மீண்டும் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில், நீதிமன்ற உத்தரவை மீறி இன்னும் பணம் கொடுக்காததால் ஆவின் நிர்வாகிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.