நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னை மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன்

  0
  1
  Court

  சென்னை கோபாலபுரம் ரவிக்குமாரின் மகன் ரிஷிகாந்த்தின் புகைப்படம் மாறியிருப்பதால் அவர்களைக் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முதன் முதலாக உதித் சூர்யா என்ற மாணவனும் அவரது தந்தை வெங்கடேஷும் கைது செய்தனர். அதன் பின்னர், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருப்பது அம்பலமானது. உதித் சூர்யாவைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 

  ttn

  இதனையடுத்து, நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சோதனை மேற்கொண்டது. அதில், சென்னை கோபாலபுரம் ரவிக்குமாரின் மகன் ரிஷிகாந்த்தின் புகைப்படம்  மாறியிருப்பதால் அவர்களைக் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாணவனின் தந்தை ரவிக்குமார் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். ஏற்கனவே, இந்த மனு தொடர்பான விசாரணை மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் நடைபெற்று வந்தது. 

  neet

  இந்நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதில் சென்னை மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தினமும் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். மேலும், மாணவரின் தந்தை ரவிக்குமாரைச் செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு சிபிசிஐடி அதிகாரி முன் சரணடையவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.