நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு !

  0
  2
  NEET

  அடுத்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவுள்ளது

  மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.  அடுத்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவுள்ளது என்றும் அதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  ttn

  இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 31 ஆம் தேதி இரவு 11:59 மணியோடு நிறைவடைந்தது. ஆனால், விண்ணப்பத்திற்கான கடைசி நாள் அன்று இணையதள கோளாறு காரணமாக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் திணறினர். அதனால், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை ஜனவரி 6 ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன் படி, நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நடைபெற்று வருகின்றன. 

  ttn

  இந்நிலையில்,  மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் சடத்திற்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கிராமப் புற மக்கள் நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு 2017 மற்றும் 2018ல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.