‘நீங்க விளையாண்டது என்கிட்ட இல்ல, எமன்கிட்ட: விறுவிறுப்பான கடாரம் கொண்டான் பட ட்ரைலர் இதோ! 

  0
  2
  விக்ரம்

  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

  சென்னை:  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

  ‘சாமி ஸ்கொயர்’ திரைப்படத்தையடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடாரம் கொண்டான்’.  அதில் கமால் ஹாசனின் இல்லைய மகள் அக்ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபி ஹாசனும் நடித்துள்ளனர். மேலும், பூஜா குமார், லீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

   ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படம் வரும் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியானது. அதில் மலேசியாவில் தங்கள் முதல் குழந்தைக்காக காத்திருக்கும் அபி-அக்‌ஷரா தொடர்ந்து அடுத்தாக பரபரப்புகளாக மாறுகிறது. விக்ரமின் ஸ்டைலிஷான தோற்றம் ரசிக்க வைக்கிறது. நீங்க விளையாண்டது என்கிட்ட இல்ல, எமன்கிட்ட’ என்று விக்ரம் கம்பிரமாக பேசும் வசனம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் பார்த்த பின்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எகிற செய்துள்ளது.