“நீங்கள் போராளி…இந்த சவாலை சமாளிப்பீர்கள்!” – பிரிட்டன் பிரதமருக்கு உத்வேகம் கொடுத்த மோடி

  0
  1
  Modi

  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி உத்வேகம் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

  டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி உத்வேகம் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா இருப்பதை அவரே ஒரு வீடியோ மூலம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளார்.

  இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறுகையில், “அன்புள்ள போரிஸ் ஜான்சன் அவர்களே! நீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் சமாளிப்பீர்கள். உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன். ஆரோக்கியமான இங்கிலாந்தை நீங்கள் உறுதி செய்ய வாழ்த்துக்கள்” என்றார்.