நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள் மோடி! – கமல் எழுதிய கடிதம்!

  0
  1
  kamalhassan

  நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள் மோடி… பொறுப்புள்ள ஆனால் ஏமாற்றமடைந்த குடிமகனாக கடிதம் எழுதுகிறேன் என்று தன்னுடைய கவலையை கடிதமாக மோடிக்கு கமல் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள் மோடி… பொறுப்புள்ள ஆனால் ஏமாற்றமடைந்த குடிமகனாக கடிதம் எழுதுகிறேன் என்று தன்னுடைய கவலையை கடிதமாக மோடிக்கு கமல் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  modi-lights-89

  ஊரடங்கு உள்ள நிலையில் வீட்டில் விளக்கேற்றும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார். பலரும் நாட்டின் ஒற்றுமைக்கு என்ற வகையில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, டார்ச் அடித்து நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தினர். ஒரு சிலர் கொரோனா ஒழிப்பு வெற்றி பேரணியை மீண்டும் மேற்கொண்டனர். பட்டாசு வெடித்து, சாலையில் ஒன்று கூடி ஒருவழியாக விளக்கேற்றும் நிகழ்வு முடிந்தது. அடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு என்ன ஆகும், தங்கள் வேலை நிலைக்குமா? சம்பளம் கிடைக்குமா, தொழில் என்ன ஆகும் என்ற கவலை ஒவ்வொருவர் மனதில் குடிகொண்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

  maiam letter

  அதில், “ஒரு பொறுப்புள்ள, அதே நேரத்தில் ஏமாற்றமடைந்த குடிமகனாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மார்ச் 23ம் தேதி எழுதிய கடிதத்தில் குதிரைக்கு மாட்டப்பட்ட கடிவாளம் போல சமுதாயத்தைப் பார்க்காமல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டாம் என்று கேட்டிருந்தேன். அதற்கு அடுத்த நாள் பண மதிப்பிழப்பு அறிவிப்பு போலவே ஊரடங்கு அறிவிப்பு வெளியானது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற வகையில் நானும் உங்களை நம்பினேன். பண மதிப்பிழப்பு அறிவிப்பின்போதும் உங்களை நம்பினேன். ஆனால் காலம் அது தவறு என்று நிரூபித்தது. நீங்களும் தவறானவர் என்பதை நேரம் நிரூபித்துள்ளது. 
  இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் உங்கள் உத்தரவுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் உங்கள் ஆதரவாளர்கள் உள்பட 1.4 பில்லியன் மக்களுக்கும் நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். இன்றைக்கு உலகில் உங்களுக்கு உள்ளது போன்று மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை. மருத்துவர்களுக்கு கைத்தட்டச் சொன்னபோது ஒவ்வொருவரும் அதை செய்தோம். 

  maiam letter

  என்னுடைய பயம் எல்லாம் என்ன என்றால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்யப்பட்டது போன்ற தவறு அதை விட மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்பதுதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏழைகளின் சேமிப்பை பதம்பார்த்தது. இந்த திட்டமிடப்படாத ஊரடங்கு உயிரிழப்புடன் கூடிய வாழ்க்கை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பால்கனியில் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வசதியானவர்கள் விளக்கு ஏற்றியபோது, ரொட்டி செய்யக் கூட எண்ணெய் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கடந்த இரண்டு உரைகளில் மக்களை அமைதிப்படுத்த முயன்றீர்கள், ஆனால் அதை விட உடனடி, முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பதை மறந்துவிட்டீர்கள். 
  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி ஜனவரி 30ம் தேதி கண்டறியப்பட்டார். இத்தாலியில் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். ஆனாலும் இத்தாலியிடமிருந்து இன்னும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கொரோனா என்ற பாதிப்பு பற்றி லேசாக விழிப்பு ஏற்பட்ட நிலையில் நான்கு மணி நேர இடைவெளியில் ஊரடங்கை அறிவித்தீர்கள். நான்கு மாத அவகாசம் இருந்த நிலையில் வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே மக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்காலத்தை உணர்ந்து திட்டமிடுதலில் நீங்கள் தேர்வியடைந்துவிட்டீர்கள். 

  உண்மையில் யார் நாட்டுக்கு நல்லது சொல்கிறார்களோ அதை கேட்க வேண்டிய நேரம் இது. தடைகளை எல்லாம் உடைத்து அனைவரையும் உங்கள் பக்கம் அழைத்து உதவிகள் கேட்க வேண்டிய நேரம் இது. இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் மனித வளம். இதற்கு முன்பு பல மிகப்பெரிய சவால்களை சமாளித்துள்ளோம். இதிலிருந்தும் நம்மால் மீண்டு வர முடியும். அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய நேரம் இது. நாங்கள் கோபமாக இருக்கிறோம், ஆனாலும் உங்கள் பக்கமே இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.