நீங்கள் கட்டுக்கோப்பான உடலைப் பெற வேண்டுமா…!? அப்படியானால் நீங்கள் சாப்பிடும் பாலில் உள்ள ‘கலோரி’ அளவை தெரிஞ்சுக்குங்க…

  0
  4
  பால்

  நமது வாழ்வில் பாலின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.தற்போது மார்க்கெட்டில் ஏகப்பட்ட வெரைட்டியில் பால் கிடைக்கிறது.பெரும்பாலான பாலில் கலப்படம் இருப்பதாக உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளே அதிர்ச்சி கொடுக்கிறார்கள். சுத்தமான பசும் பால் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது என்றாலும் விலை சற்று அதிகம்தான்.சிலருக்கு பால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் என்பதால் அவர்கள் பாலுக்கு இணையாக கிடைக்கும் மாற்று பாலை அதிகம் விரும்புகிறார்கள்.

  நமது வாழ்வில் பாலின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.தற்போது மார்க்கெட்டில் ஏகப்பட்ட வெரைட்டியில் பால் கிடைக்கிறது.பெரும்பாலான பாலில் கலப்படம் இருப்பதாக உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளே அதிர்ச்சி கொடுக்கிறார்கள். சுத்தமான பசும் பால் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது என்றாலும் விலை சற்று அதிகம்தான்.சிலருக்கு பால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் என்பதால் அவர்கள் பாலுக்கு இணையாக கிடைக்கும் மாற்று பாலை அதிகம் விரும்புகிறார்கள்.

  cow

  ஆனால், நீங்கள் சரியான பாலினை தேர்தெடுக்கிறீர்களா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இது உங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையை பொறுத்தது, அதன் அளவை வைத்தே உங்களுக்கு ஒவ்வாமை அளவை அறிந்துகொள்ளமுடியும்.

  இப்போது பாலும் அதன் சத்துக்களை பற்றி பார்ப்போம்.

  1.முழுமையான பசும்பால்:

  பசும்பாலில் அதிகளவு நன்மைகளை வைத்துள்ளது.இது எலும்புகளுக்கு முக்கியமாக  கால்சியம் மற்றும் வைட்டமின் A,D அதிக கொழுப்பு சத்து ஆகியவை இருப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்யத்தை தரவல்லது.

  cow

  இதில் கொழுப்பு அதிகம் உள்ளதுதான் ஆயினும் அவை உடலில் சீக்கிரத்தில் உறிஞ்சிக்கொள்ளப்படுவதால் இதில் ஆபத்து இல்லை,நீங்கள் உங்கள் கலோரி அளவை ,மனதில் வைத்துக்கொண்டிருந்தால் நீங்கள் பசும்பாலை தவிர்த்துக்கொள்ளலாம் இல்லையென்றால் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம். ஒரு டம்ளர் பாலில் மொத்தமாக 150 கலோரிகள் உள்ளன.

  2.ஸ்கிம் பசும்பால்:

  பசும்பாலில் இருக்கும் கொழுப்பை முழுமையாக நீக்கி கிடைப்பதுதான் ஸ்கிம் பசும்பால்,இதில் குறைந்தளவு கலோரிகளை கொண்டுள்ளது அதாவது பசும்பாலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த ஸ்கிம் பாலில் வெறும் 100 கலோரிகள்தான் உள்ளது.

  skim milk

  ஒரு டம்பளர் பாலில் 8கி புரதமும்,12கி கார்போஹைட்ரெட்சும், உங்கள் தினசரி கால்சியம் அளவில் 30% தருகிறது.நீங்கள் உங்கள் இடுப்பின் அளவை கவனத்தில் கொண்டால் இந்த 12கி கார்போஹைட்ரெட் அளவை நினைவில் கொள்ளுங்கள்.

  3.அல்மோன்ட் மில்க்/ பாதாம் பால்:

  வீகன்களுக்கு விலங்குகளிடமிருந்து கிடைக்கும் உணவுகளை உண்ண மறுப்பர்,அவர்களுக்காகவே கிடைப்பதுதான் இந்த அல்மோன்ட் மில்க் இது அல்மோன்ட்களிலிருந்து கிடைக்கும் பால். இது அதிகளவு ஆன்டி ஆக்சிடண்டுகளையும், வைட்டமின் E ஆகியவை அதிகம்.

  almond milk

  உடல் எடையைக் குறைபவர்கள் இந்த அல்மோன்ட் மில்க்கை பயமில்லாமல் பருகலாம். ஏனெனில் இதன் ஒரு கப் பாலில் வெறும் 30 கலோரிகளே உள்ளன. மேலும், இதில் புரத சத்து வெறும் 1% தான் உள்ளதால் இது உங்கள் எலும்புகளுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்ய இயலாது.

  4.காஷு மில்க்/முந்திரி பால்:

  காஷு மில்க் மிகவும் இனிப்பானதாக இருக்கும் மேலும் உங்களுக்கு அல்மோண்டின் பிளேவர் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் காஷு மில்க்கை தேர்வு செய்யலாம். இதில் பசும்பாலை விட 50% அதிக கால்சியம் சத்து உள்ளது.

  cashnew nut

  இது உங்கள் எலும்புகளுக்கு அதிக நன்மைகளை தரவல்லதாய் இருக்கும். மேலும் இதில் அல்மோன்ட் மில்க்கை போலவே இதுவும் புரதம்  குறைவாக இருக்கும் ஆதலால் அதற்கேற்றவாறு உங்கள் உணவை சீராக அளந்து உண்ணுங்கள்.

  5.சோயா மில்க்:

  சோயா மில்க் லாக்டோஸ் இல்லாதது மேலும் இது பசும்பாலை விட அதிகளவு கால்சியம் அளவை கொண்டுள்ளது. இது வைட்டமின் B, ஐயன்,புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டவை .

  soya

  உங்களுக்கு கேன்செர் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய கவலை இருக்குமாயின் நீங்கள் வேறே மில்க்கை தேர்வு  செய்யலாம். ஏனென்றால் இந்த சோயா மில்க்கில் உள்ள அதிகளவு ஈஸ்ட்ரோஜென் அளவு மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோன்களை அதிகப்படுத்துகிறது

  6.தேங்காய் பால்:

  தேங்காய் பால் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் பால். இதில் இயற்கையாகவே சர்க்கரை நிறைந்திருப்பதால்  நீங்கள் வாங்கும் பாக்கெட்டுகளில் சர்க்கரை இன்னும் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து வாங்கிக்கொள்ளவும். அதிக சர்க்கரை உடலுக்கு நல்லதல்ல.

  coconut milk

  இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் B,D ஆகியவை உள்ளன.மேலும் இதில் நட் மில்க்கை விட அதிகளவு சாட்டுரேடட் கொழுப்பு இருக்கிறது.

  7.ரைஸ் மில்க்:

  rice milk

  ரைஸ் மில்க் எளிதில் ஜீரணமாகும் ஒன்று. மேலும் உங்கள் வயிறு மிகவும் அலர்ஜி ஆகும் தன்மை கொண்டதாய் இருந்தால் உங்களுக்கு இந்த ரைஸ் மில்க் மிகவும் சிறந்த ஒன்று.ஆனால் உங்கள் எடையைக்குறைக்க நினைத்தால் இது சரியானதன்று.மேலும் இது ஒரு டம்பளரில் 25கி கார்போஹைட்ரெட்ஸ் இருக்கிறது.

  8.ஒட்டக பால்:

  ஒட்டக பால், இருக்கிற  அனைத்து டைரி மில்க் வகைகளில் மிகவும் குறைவான சாட்டுரேடட் கொழுப்பை கொண்டது. இது சிறந்த ப்ரோபையோட்டிக்(நல்ல பாக்டீரியா) இது உங்கள் செரிமானத்தை சீராக்கவல்லது.

  milk

  இது இயற்கையான முறையில் உங்கள் இன்சுலின் அளவுகளை கட்டுப்டுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால்இதில்  கலோரியின் அளவு அதிகம். ஒரு கப்பில் 107 கலோரி இருக்கும்.

  மேலே குறிப்பிட்ட அனைத்து பால்  வகைகளும் உங்கள் ஆரோக்கியத்தில் ஒரு நாள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையே! ஆதலால் உங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற சிறந்த பால் வகையை தேர்ந்தெடுத்து உபயோகிப்பது மிகவும் அவசியம்.