நீங்களே குப்பைகளை போடுவீங்களாம்… அப்பறம் நீங்களே எடுப்பீங்களாம்… மோடியை கலாய்த்த கே.எஸ். அழகிரி 

  0
  1
  KS Alagiri

  பாதுகாப்பு அதிகமுள்ள இடத்தில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கொட்டியது யார்? பிரதமர் மோடி குப்பைகளை சுத்தம் செய்வது விளம்பரமாக இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் சுத்தம் செய்வதை வரவேற்கிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

  Modi

  தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, “இந்திய சீன பிரதமர்களின் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகளின் இராஜதந்திர உறவு இன்னும் மேம்பட்டால் நன்றாக இருக்கும். இந்தியா சீனா இடையே கூட்டுறவு குழு அமைப்பது தொடர்பாக நடந்த பேச்சானது உள்நாட்டு உற்பத்தியை, உள்நாட்டு வணிகர்களை பாதிக்காத வகையில் அந்த உடன்படிக்கை எப்படி அமையப்போகிறது என்பதை பொறுத்து அமையும்.

  Ks Alagiri

  திமுக, காங்கிரஸ் கட்சிகள் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.  ஆகவே இந்து விரோதி, கிறிஸ்தவ விரோதி, இஸ்லாமிய விரோதி என கூறுவது நியாயமற்றது. சென்னை மட்டுமல்ல தூத்துக்குடியிலும் இரண்டு மாதங்களில் 20 கொலைகள் நடந்துள்ளதாக பத்திரிக்கை மூலம் அறிந்துகொண்டோம். ஆகவே மாணவர்களை நெறிப்படுத்துவதில் அரசு எடுத்த நடவடிக்கைகள்  போதுமானதாக இல்லை” என தெரிவித்தார்.