நிவாரண பொருட்களின் மூட்டையை முதுகில் சுமந்து சென்ற வட்டாட்சியர்!

  0
  1
   வட்டாட்சியர்

  அங்கிருந்து ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

  கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில், ரூ.1000 பணமும், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க பொருட்கள் அனைத்தும் கோவை தாலுக்காவில் இறக்கப்பட்டன. அங்கிருந்து ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

  ttn

  அதே போல, கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிவாரண பொருட்களை  வட்டாட்சியர் மகேஷ்குமார், ஊழியர்களுடன் சேர்ந்து மூட்டைகளை முதுகில் சுமந்து அலுவலகத்திற்குள் கொண்டு சென்றார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரியை காக்க வைக்காமல், அவரே மூட்டைகளை சுமந்து சென்றதால் அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.