‘நிலாவுக்கு செல்ல காதலி வேண்டும்…விண்ணப்பிக்க கடைசிநாள் இதுதான்’ பிரபல கோடிஸ்வரரின் அறிவிப்பு!

  0
  7
  யூசகு மேசவா

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 17. நான் விண்ணப்பித்தவர்களிலிருந்து ஒருவரை மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு செய்வேன்

  ஜப்பானைச் சேர்ந்த சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி யூசகு மேசவா. இவர்  ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனத்தின் மூலம் நிலவுக்கு செல்ல திட்டமிட்டு கோடிக்கணக்கில் பணத்தைச் செலுத்தி அந்நாட்டு மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளார். 

  ttn

  இந்நிலையில் யூசகு மேசவா  தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நான் என் வாழ்க்கையில் விரும்பியபடி உள்ளேன். 44 வயதாகும் என்னை  சில நேரங்களில் வெறுமை ஆட்டிப்படைக்கிறது. என் வாழ்க்கையில்  எனக்கு ஒரு பெண் தேவை.  நான் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவுக்கு பயணம் செய்யவுள்ளேன்.

   

  ttn

  என்னுடன் பயணம் செய்ய ஒரு காதலி தேவை.  இதன் மூலம் நிலவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் பெண்ணாக ஏன்  நீங்கள் இருக்க கூடாது? 20 வயதிற்கு மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 17. நான் விண்ணப்பித்தவர்களிலிருந்து ஒருவரை மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு செய்வேன்’ என்று கூறியுள்ளார். யூசகு மேசவா இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.