நிலச்சரிவில் சிக்கிய மஞ்சுவாரியர் படக்குழு! 

  46
   மஞ்சுவாரியர்

  இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழுவினர் சிக்கியுள்ளனர்.  

  இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழுவினர் சிக்கியுள்ளனர்.  

  கடந்த சில வாரங்களாகவே வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. அதில் பெருப்பான பகுதிகளான ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் உட்பட பல மாநிலங்கள் வெள்ளக்காடாக்க மாறியுள்ளனர். இதுவரை இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். 

  இந்நிலையில் மலையாளப் பட இயக்குநர் சணல் குமார் சசிதரன் இயக்கும் மலையாள படத்தின் ஷூட்டிங் இமாச்சலில் உள்ள சத்ரா பகுதியில் நடந்து வந்தது. இன்னும் பெயர் வைக்கப்படாத அதில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வந்துள்ளார். சத்ரா பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து வசதி மற்றும் இணைய தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை. 

  இதனால் அங்கே நடிகை மஞ்சுவாரியர், சணல் குமார் சசிதரன் உட்பட  படத்தின் 30 பேர் சிக்கியுள்ளனர். 
  என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கி கொண்டு இருந்தவர்களுக்கு உதவியாக நேற்று சேட்டிலைட் ஃபோன் கிடைத்துள்ளது. அதன் மூலம் நடிகை மஞ்சுவாரியர், தனது தம்பி மதுவாரியரிடம் அங்கு நிலவும் சூழ்நிலையைக் குறித்துத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மது வாரியர், மத்திய அமைச்சர் முரளிதரனிடம் உதவி கோரியுள்ளார்.