‘நிர்வாகி மகளை போனில் அழைத்து…’ இப்படியா நடந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின்..?

  0
  1
  உதயநிதி

  கூட்டம் முடிந்ததும் இளைஞரணி மாவட்ட நிர்வாகி ஒருத்தரின் மகளுக்கு, அன்று பிறந்தநாள் எனச் சொல்லி இருக்கிறார்கள். உடனே, உதயநிதி

  தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வழக்கமாக சென்னையில் இருக்கிற அதன் தலைமை அலுவலகமான அன்பகத்தில் நடைபெறுவது தான் வழக்கம்.

  மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி இளைஞர் அணிச் செயலர் பொறுப்புக்கு வந்ததும் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் தான், ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார். சமீபத்தில், கிண்டி நட்சத்திர ஓட்டலில் நடந்த கூட்டத்தில் 400- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.  தலைக்கு 1,000 ரூபாய் செலவில் மதிய விருந்து கொடுத்து இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் கூட, இந்த மாதிரி தடபுடலாக ஒரு போதும் விருந்து கொடுத்தது இல்லையாம். udhayanidhi

  கூட்டம் முடிந்ததும்  இளைஞரணி மாவட்ட நிர்வாகி ஒருத்தரின் மகளுக்கு, அன்று பிறந்தநாள் எனச் சொல்லி இருக்கிறார்கள். உடனே, உதயநிதி, அந்த நிர்வாகியில் மொபைல் போனில்  அவரது மகளிடம் பேசி, வாழ்த்து சொல்லியிருக்கார். அத்தோடு ‘இனி, கட்சி பேனர், போஸ்டர் அடிக்கிற போது உங்கள் பேருக்கு முன்னால், சின்ன தளபதி என போட்டுக் கொள்ளலாமா? என சிலர் அனுமதி கேட்க, சிரித்துக் கொண்டே கடந்திருக்கிறார் உதயநிதி. மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி.