நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி!

  0
  1
  nirmala

  இந்தியா முழுவதும் ஆன்லைனில் சினிமா டிக்கெட் பெறும் திட்டத்தை அமல்படுத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை குழுவினர்  இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

  ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின் திரையரங்கு டிக்கெட்டுகளின் விலை பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. திரைத்துறையினரின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னர் சினிமா டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும் முன்னணி கதாநாயகர்கள் படங்கள் வெளியாகும் போது அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது.

  Nirmala

  ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் போது 30 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஆன்லைனில் சினிமா டிக்கெட் பெறும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை குழுவினர்  இன்று நிர்மலா சீதாராமனை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஜிஎஸ்டியில் சில சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் விடுத்துள்ளனர்.