நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனைக்கு எதிராக குற்றவாளிகளில் ஒருவர் மீண்டும் சீராய்வு மனு 

  0
  3
  முகேஷ் சிங்

  நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். 

  டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கின் குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவன் என்பதால் அவரும் விடுதலை செய்யப்பட்டார். எஞ்சியிருக்கும் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் படி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

  Nirbhaya case convict

  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் குடியரசுத் தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தூக்கில் போடுவதற்கான சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லாத சூழல் உள்ளது. இந்த வழக்கில் மூன்று முறை தேதி குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வரும் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  இந்நிலையில் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குற்றவாளிகளில் முகேஷ் சிங் புதிய மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கருணை மனு அளிக்க அனுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.