நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு…தெறி படத்தின் ட்வீட்டை போட்டு தெறிக்கவிட்ட திருநெல்வேலி டிசிபி!

  0
  2
  அர்ஜூன் சரவணன்

  குற்றம்சாட்டப்பட்ட முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (33) ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  

  மருத்துவ மாணவி  நிர்பயா   2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (33) ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  

  ttn

  7 ஆண்டுகள் கழித்து  இன்று அதிகாலை  5.30 மணிக்கு   டெல்லி திகார் சிறையில்  இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் உறுதி செய்தனர். அரை மணி நேரம் அவர்கள் நால்வரும் தூக்கில் தொங்கவிடப்பட்டதாகச் சிறைச்சாலை டிஐஜி அறிவித்துள்ளார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

  இந்நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன், ‘கடைசியா.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்’ என தெறி படத்தின் வசனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதை கண்ட பலரும் கெத்து சார் என்று  ரியாக்ஷன் கொடுத்து வருகின்றனர்.