நிர்பயா குற்றவாளிகளின் கடைசி தந்திரமும் தோல்வியில் முடிவடைந்தது…. இன்னும் சில மணி நேரத்தில் தூக்கிலிடுவது உறுதி….

  0
  3
  நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

  தூக்கிலிட தடை விதிக்க மறுத்த டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நேற்று மாலை நிர்பயா குற்றவாளிகளில் 3 பேர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆக, நிர்பயா குற்றவாளிகள் தங்களது தூக்கு தண்டனை தள்ளிபோட மேற்கொண்ட கடைசி நொடி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

  டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். 

  டெல்லி உயர் நீதிமன்றம்

  இருப்பினும் அண்மையில் டெல்லி நீதிமன்றம் 4வது முறையாக இம்மாதம் 20ம் தேதியன்று குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெத் வாரண்ட் பிறப்பித்தது. வழக்கு போல் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கு தண்டனைக்கு தடை கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நேற்று டெல்லி நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து விட்டது. இருப்பினும் அவர்கள் தங்களது தந்திர நடவடிக்கையை கைவிடவில்லை. நேற்று மாலை தாமதமாக டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

  நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

  ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளின் மனுவை நிராகரித்தது. இணைப்பு இல்லை, கட்சிகளின் குறிப்பு இல்லை, இந்த விஷயத்தில் எதுவும் இல்லை, பிராமண பத்திரங்கள் இல்லை, எதுவும் இல்லை என நீதிமன்றம் சுட்டிகாட்டியது. உயர் நீதிமன்றம் மனுவை நிரகாரித்ததால் இன்னும் சில மணி நேரங்களில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடுவது உறுதி.