நியூசிலாந்து தொடரில் ஷிகர் தவானுக்கு மாற்றாக விளையாடப் போகும் வீரர்கள் இவர்கள்தான்!

  0
  4
  top tamil news

  நியூசிலாந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

  மும்பை: நியூசிலாந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

  சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக இத்தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சனும், ஒருநாள் போட்டிகளுக்கு பிரித்வி ஷாவும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  ttn

  டி20 போட்டிக்கான இந்திய அணி:

  விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.

  ttn

  ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

  விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷ்ப் பண்ட் (கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.

  இவ்விரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வருகிற 24-ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.