நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 348 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

  0
  2
  iyer

  நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ஹேமில்டன்-இல் உள்ள சீடன் பார்க் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

  shaw

  ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இடம் பெறாததால், பிரித்திவி ஷா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் ஷா 20 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. 

  iyer

  இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு கணிசமான ரன்களை அடித்து கொடுத்தனர். மிகச் சிறப்பாக ஆடி வந்த கேப்டன் விராட் கோலி அரைசதம் கண்ட பிறகு 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. 

  மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்து வந்த ஸ்ரேயாஷ் ஐயரும் அரை சதம் கடந்தார். விராட் கோலி வெளியேறிய பிறகு ஸ்ரேயாஷ் ஐயர் உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இவர் துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார். மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்காமல் நல்ல ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். 

  iyer

  இதனிடையே ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 107 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்ஸர்களாக பறக்க விட்டுக் கொண்டிருந்த கேஎல் ராகுல் அரைசதம் கண்டார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது.

  jadhav

  கேஎல் ராகுல் 88 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 26 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.