நிதி நிலவரம் சரியில்லை… முதல்வர் முதல் கவுன்சிலர் வரை சம்பளத்தில் 75 சதவீதம் கட்…… தெலங்கானா அரசு அதிரடி….

  0
  5
  தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ்

  கொரோனா வைரஸ் காரணமாக தெலங்கானாவின் நிதிநிலவரத்தை கருத்தில் கொண்டு, மாநில முதல்வர் முதல் கவுன்சிலர் வரை அவர்களது சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  தொற்று நோயான கொரோனா வைரஸ் தினந்தோறும் அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.

  சம்பள குறைப்பு

  அதேபோல் மாநிலங்களும் இந்த முடக்கத்தால் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. மேலும், கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் அதிகளவில் செலவிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக தெலங்கானாவின் நிதிநிலவரம் சற்று கவலைக்குரிய வகையில் இருப்பதாக தெரிகிறது. இதனால் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சம்பளம் முதல் கவுன்சிலர்கள் வரை சம்பளத்தில் 75 சதவீதம் குறைத்துள்ளார்.

  சம்பள குறைப்பு

  இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு முதல்வர், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாநகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர் வரை சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் இதர மத்திய சேவைகள் அதிகாரிகளின் சம்பளத்தில் 60 சதவீதமும், இதர பிரிவு தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதமும் குறைக்கப்படும். குரூப் 4, அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.