நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் வீடியோ மூலம் ஆலோசனை

  0
  1
  TN Chief Minister

  தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

  சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

  கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சில பேர் அலட்சியமாக செயல்படுகின்றனர். அதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  covid 19

  இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி நாளை வீடியோ மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவே நாளை காலை 11 மணியளவில் வீடியோ மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு எவ்வாறு உள்ளது என அப்போது ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.