நாளை காலை 9 மணிக்கு ஒரு வீடியோவை வெளியிடுவேன் – பிரதமர் மோடி!

  0
  7
  மோடி

  இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஆனால், இந்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு உயர்ந்து இருக்கும் என கூறப்படுகிறது. 

   

   

  இந்நிலையில் இன்று மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடினார். நாளை காலை 9 மணிக்கு மீண்டும் மக்களை காணொலி மூலம் சந்திக்கவுள்களதாக தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்தர மோடி நாட்டு மக்களிடம்  சிறிய வீடியோ காட்சி மூலம் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.