“நாளை என்ற நாள் இல்லை என்பது போல காதலியுங்கள்!” – மனைவி ரித்திகாவுடன் ரோகித் ஷர்மா: புகைப்படம் உள்ளே

  0
  4
  rohit sharma

  மனைவி ரித்திகாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் காதலர் தின ஸ்பெஷலாக பகிர்ந்தார்.

  மும்பை: மனைவி ரித்திகாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் காதலர் தின ஸ்பெஷலாக பகிர்ந்தார்.

  இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 3 போட்டிகளையும் வென்று இந்திய அணியை வொயிட்வாஷ் செய்தது.

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  Happy valentine day everyone. Love your loved ones like there is no tomorrow ❤️ @ritssajdeh

  A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

  5-வது டி20 போட்டியின்போது பேட்டிங் செய்த ரோகித் ஷர்மா ரன்கள் எடுத்திருந்தபோது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதியுற்றார். இதைத் தொடர்ந்து அந்தப் போட்டியில் இருந்து காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்தும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

  ttn

  இந்த நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் ரோகித் ஷர்மா தனது மனைவியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தார். மேலும் “நாளை என்ற நாள் இல்லை என்பது போல காதலியுங்கள்!” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல ரோகித் ஷர்மாவின் மனைவி ரித்திகாவும் ரோகித் ஷர்மா மற்றும் மகள் சமைராவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார்.