நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம்- மத்திய அரசு!

  0
  1
  street light

  தெரு விளக்குகளை நாளை இரவு அணைக்கக்கூடாது. மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்கக் கூடாது

  பிரதமர் மோடி நேற்று வீடியோ மூலம் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

  மோடி

  இந்நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெரு விளக்குகளை நாளை இரவு அணைக்கக்கூடாது. மருத்துவமனை, பேருந்துநிலையம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்கக் கூடாது.மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விளக்குகள் அணைக்க தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை” என தெரிவித்துள்ளது.