நாளைக்காவது கூட்டம் நடக்குமா? எல்லாம் நிர்மலா சீதாராமன் கையில்தான் இருக்கு?

  0
  1
  நிர்மலா சீதாராமன்

  நேற்று நடைபெறுவதாக இருந்த 36வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நாளையாவது திட்டமிட்டப்படி கூட்டம் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பை செயல்படுத்தும் நோக்கிலும், அதுவரை இருந்த அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாகவும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்திய வரலாற்றில் வரிவிதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி. கருதப்படுகிறது. 2017 ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தது. 

  ஜி.எஸ்.டி.

  ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இந்தியாவுக்கு புதியது என்பதால் அதில் இடர்பாடுகள் மற்றும் குறைகள் சரிசெய்யும் நோக்கில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூடி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கும்.

  இதுவரை 35 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. 36வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இந்த கூட்டம் நாளைக்கு (சனிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக என்பது போல் ஜி.எஸ்.டி. கவுன்சில்  வரலாற்றில் முதல் முறையாக நேற்றுதான் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நாளையாவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  மின்சார வாகனங்கள்

  நாளை பெற உள்ள கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.