நாமக்கல் க்ரீன் பார்க் மெட்ரிக் பள்ளியில் வருமான வரித்துறை சோதனை..!

  0
  7
  Green park school

  க்ரீன் மெட்ரிக் பள்ளி, நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியின் இயக்குனர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

  நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பலியான க்ரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மற்றும் நீட் பயிற்சி மையத்தில் தனியார் நிறுவனமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் வருமான வரித்துறை கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகிறது. 

  Green park

  க்ரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியின் இயக்குனர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதில், பள்ளியின் இயக்குனர்களுள் ஒருவர் வீட்டில் அதிக கட்டணம் பெறுவதற்கான நோட் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சோதனையை தொடர்ந்த வருமான வரித்துறையினர் பள்ளி கலையரங்கில் பதுக்கி வைத்திருந்த சுமார் 30 கோடி ரூபாய் பணத்தையும்  சில முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

  Money

  மேலும், அந்த தனியார் கல்வி நிறுவனத்தில் சுமார் 150 கோடி ருபாய் வரை வருமான வரி கட்டாமல் மோசடி செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனால், பள்ளி மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு பள்ளியின் கலையரங்கத்திற்கு மட்டும் வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ளனர்.