“நான் விராட்கோலி, பந்து வீசுங்க” – இணையத்தை கலக்கும் வார்னரின் 3வயது மகள் வீடியோ!

  12
  டேவிட் வார்னர்

  “நான் விராட் கோலி.. இப்போ பந்து வீசுங்க” எனக்கூறி பந்தை அடிக்கும் டேவிட் வார்னர் இன் 3 வயது மகளின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி படும் வைரலை கிளப்பியுள்ளது.

  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இத்தொடரில் குறிப்பாக, மூன்றாவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் வார்னர் மட்டும் பின்ச் இருவருமே ஆட்டத்தை முடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தந்தனர். 

  “நான் விராட் கோலி.. இப்போ பந்து வீசுங்க” எனக்கூறி பந்தை அடிக்கும் டேவிட் வார்னர் இன் 3 வயது மகளின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி படும் வைரலை கிளப்பியுள்ளது.

  virat

  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இத்தொடரில் குறிப்பாக, மூன்றாவது டி20 போட்டியில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் வார்னர் மட்டும் பின்ச் இருவருமே ஆட்டத்தை முடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தந்தனர். 

  இந்த தொடருக்கு பிறகு வார்னர் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். வார்னருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். தனது 3 வயது மகளுடன் கிரிக்கெட் விளையாடினார் வார்னர். அப்போது மகளுக்கு வார்னர் பந்துவீசுகையில், “நான் விராட் கோலி..” இப்போ பந்து வீசுங்க” என கூறி அவரின் மூன்று வயது மகள் பந்தை அடிக்கும் சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விராட் கோலி யையும் இணைத்திருந்தார். 

  இந்த வீடியோவை பார்த்த அனைவரும் வார்னர் மகன் செயலை பார்த்து மனம் உருகி “சோ.. கியூட்” என கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.