நான் ரெடி நீங்க ரெடியா ரஜினி! இந்து ராம் அதிரடி!!

  0
  1
  Hindu N Ram

  தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்துடன் விவாதிக்க நான் தயார் என இந்து குழுமத் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். 

  தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்துடன் விவாதிக்க நான் தயார் என இந்து குழுமத் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். 

  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஊடகத்துறையும் விளம்பர சர்ச்சைகளும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து என்.ராம், நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் குணசேகரன், புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன், செய்தியாளர்கள் சங்கச் செயலாளர் பாரதி தமிழன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

  ரஜினி

  நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து என்.ராம், “டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும். வன்முறையை காவல்துறை கட்டுப்படுத்தாமல் பல இடங்களில் வேடிக்கை பார்த்ததை டி.வியில் பார்த்தேன். எதிர்ப்பு  போராட்டத்தை இந்து – முஸ்லிம் வன்முறையாக மாற்ற பார்க்கின்றனர். CAA, NRC, NPR சட்டங்கள் குறித்து தற்போது தான் நடிகர் ரஜினிகாந்திற்கு புரிதல் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். கலவரத்தை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினமா செய்யட்டும் என ரஜினிகாந்த் பேசியது வரவேற்கத்தக்கது. CAA குறித்து இன்னும் பல விஷயம் ரஜினிகாந்த் பலரிடம் விவாதிக்கலாம். நான் கூட தயாராக இருக்கிறேன். பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா சர்ச்சையாக தான் பேசுகிறார். பா.ஜ.க அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் இதுபோல பேசுகிறார் என தோன்றுகிறது.  இது புதிதல்ல. மாநில அரசு தான் இதுபோன்ற பேச்சுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   

  வேறு மொழி ஊடகங்களை ஒப்பிடும்போது தமிழ் ஊடகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பரபரப்பு செய்திகள், தவறான செய்திகளை ஒளிபரப்பு செய்வதில்லை.எந்த விளம்பரம் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற பொறுப்பு பத்திரிகைகளுக்கு இருக்கிறது. கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.விளம்பரம் மூலம் நெறியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தால் எந்த பாதிப்பும் இருக்காது. டிஜிட்டல் விளம்பரம் மோசமானதாக இருக்கிறது. விளம்பர துறைகள் இதை கண்காணிக்க வேண்டும்” என தெரிவித்தார்.