நான் மோடியின் பூமியில் இருந்து வந்தேன் ! ஓ.பி.ஆர். பேச்சால் அதிமுகவில் சர்ச்சை !

  9
   ஓ.பி.ஆர்.

  ஓபிஎஸ் மகன் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பேசியதும், அவரது படம் ரவீந்திரநாத்தின் லட்டர்பேடில் இடம்பெற்றிருப்பதும் ஈபிஎஸ்ஸை கடுப்பாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
   
  சிகாகோ உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வததின் மகன் ரவீந்திரநாத் பேசும்போது மோடியின் பூமியில் இருந்து உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார்.

  ஓபிஎஸ் மகன் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பேசியதும், அவரது படம் ரவீந்திரநாத்தின் லட்டர்பேடில் இடம்பெற்றிருப்பதும் ஈபிஎஸ்ஸை கடுப்பாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
   

  ravindranath

  சிகாகோ உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வததின் மகன் ரவீந்திரநாத் பேசும்போது மோடியின் பூமியில் இருந்து உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்றார். இப்படி பேசியது எம்.ஜி.ஆர்., ஜெ. பெயர்களை மீறி மோடி பெயரை உச்சரித்ததால் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நல்ல பெயர் எடுக்க இப்படி பேசியிருக்கலாம் என ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

  letterpad

  இந்நிலையில் எம்.பி ரவீந்திரநாத் லெட்டர் பேடில்  அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எம்.பி. ரவீந்திரநாத் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். இதன் மூலம் லட்டர் பேடில் மோடி படம் இடம்பெற்றுள்ள விவகாரம் மேலும் பிரச்சனையை கிளப்பி உள்ளது. அதிமுகவில் இருந்து தேனி தொகுதியில் இருந்து எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் லெட்டர் பேடில் மோடியின் படம் இடம் பெற்றுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 
  பிரதமரையும், பாஜகவையும் ஈர்க்கவே ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி ஓபிஎஸ் மகன் செயலால் அதிமுகவில் சர்ச்சை ஏற்பட்டு வருவதால் எடப்பாடி பழனிசாமியும் டென்ஷனில் இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.