நான் திமுகவிலேயே கிடையாது… போட்டு உடைத்த முக.அழகிரி!

  0
  1
  Azhagiri

  என்னால் அந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து செல்கின்றேன் என்றார்.

  காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இல்லத்திற்கு இன்று வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ஹெச்.ராஜாவை தனியறையில் சந்தித்துப் பேசினார். ஹெச்.ராஜாவுடனான சந்திப்பை முடித்து விட்டு வெளியில் வந்த பின், பத்திரிகையாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, ஹெச்.ராஜாவின் மகளுக்கு இந்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. என்னால் அந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து செல்கின்றேன் என்றார். 

  Azhagiri

  திமுகப் பொதுக்குழு பற்றிய கேள்வியை நிருபர்கள் கேட்டப் போது, திமுகப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் திமுகவிலேயே இல்லை.. ஆளை விடுங்கப்பா எனக் கூறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். சமீபத்தில் நடைப்பெற்ற பொதுக்குழுவில், நான் சர்வாதிகாரி என்றெல்லாம் ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.