நான் சாண்டி பற்றி பேசுறது அவங்க மனைவிக்கு வருத்தமா இருக்கும்: முன்னாள் மனைவி ஓபன் டாக்

  0
  20
  சாண்டி-காஜல் பசுபதி

  கடைசியா நான் அவங்கள, அவரோட குழந்தையை பார்க்கும் போதுதான் பார்த்தேன்

  நான் சாண்டி  பற்றி நிறைய பேசுவது அவரது மனைவிக்கு வருத்தத்தை ஏற்படும் என்று காஜல் பசுபதி தெரிவித்துள்ளார். 

  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஒரே சண்டையும் சச்சரவுமாக உள்ளது. இதனால் பிக் பாஸ் சீசன் 3 ஹாட்டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. இதனால் பிக் பாஸ் சீசன் 3 குறித்து அதன் முன்னாள் போட்டியாளர்களிடம் கருத்து கேட்கும் வழக்கம் டிரெண்டாகி  வருகிறது. 

  kajal

  இந்நிலையில், பிரபல இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்த  நடிகை காஜல் பசுபதி பிக் பாஸ் 3 பற்றி தனது கருத்தினை பகிர்ந்துக் கொண்டார். அதில், சாண்டி  குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பல நேர்காணல்களில் சாண்டி  குறித்து நான்  பேசுவது அவரது மனைவிக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம். அவங்க பொண்டாட்டி பாவம் என்று கூறியுள்ளார். அதற்கு பிரேக் அப் ஆனாலே அவங்க எக்ஸ் பத்தி யாரையும் பேசமாட்டாங்க, ஆனா நீங்க பேசுறீங்கனா? என்று கேட்க, நான் அவரை பிரெண்ட்டா பார்க்குறேன். அதனால அவரை பத்தி பேசுறேன். எனக்கு சாண்டி பிக் பாஸ் வீட்டுக்குள்ள போற  விஷயமே தெரியாது. கடைசியா நான் அவங்கள, அவரோட குழந்தையை பார்க்கும் போதுதான் பார்த்தேன். இருந்தாலும்  பிக் பாஸ் டைட்டிலை சாண்டி பாய் ஜெயிக்கணும் அப்படிங்குறது என்னோட ஆசை’ என்றார். 

  sandy

  மேலும் இத்தொடர்ந்து பேசிய அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டைக்காகவே இருக்குறது வனிதா தான். அதே போல் ஆல் இன் ஆல் அழகு ராணி பொண்ணுன்னா அது லாஸ்லியா.  கவினுக்கு லாஸ்லியா மீது தான் ஆர்வம் என்று கூறியுள்ளார்.