‘நான் கொரோனாவை விட பயங்கரமானவன்’..போலீசாரிடம் வீரவசனம் பேசி, கம்பி எண்ணும் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்!

  0
  1
  arrested

  கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை எடுக்குமாறும்,2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையியல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ் (35) ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். 

  ttn

  அப்போது அங்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சதீஷை தடுத்து நிறுத்தி வீட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அதனை கேட்காத சதீஷ், நான் கொரோனாவை விட பயங்கரமானவன் என்றும் எனக்கு உத்தரவு போடா நீங்கள் யார் என்றெல்லாம் வீரவசனம் பேசியுள்ளார். இதனால் கடுப்பான போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.