‘நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம்.. உன் அழுகுரல்.. என்னுள் இன்னும் ஒலிக்கிறது’ : அமைச்சர் விஜயபாஸ்கரின் கண்ணீர் கவிதை!

  0
  6
  விஜயபாஸ்கர்

  சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது

  மணப்பாறை : குழந்தை சுஜித்தின் மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் இயங்கினேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 

  sujith

  திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான்.  5 நாட்கள் தொடர்ந்த இந்த போராட்டம் கடைசியில் தோல்வியில் முடிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. 

  minister

  குழந்தையை மீட்கும் இந்த போராட்டத்தில் சுயநலம் பரராமல் இரவு பகலாக உழைத்த அத்தனை நபர்களுக்கும் சுஜித்தின் இழப்பு பேரிழப்பாகும். அதில் முக்கியமாக சொல்லவேண்டியவர் அமைச்சர் விஜயபாஸ்கர்.

  vijayabaskar

  குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சில மணிநேரங்களில் சம்பவ இடத்தை அடைந்தவர் கடைசி வரை இடத்தை விட்டு அகலாமல் மீட்பு பணிகளை பார்வையிட்டு வந்தார். அவருக்கும் கூட சுஜித்தின் மரணம் எத்தனை மனவேதனையையும்  ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. 

  இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சுஜித் மரணம் குறித்து இரங்கல் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில், 

  *நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது.*

  *எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.*

  *கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.*

  *மருத்துமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது.*

  *எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது.*

  *மனதை தேற்றி கொள்கிறேன். ஏன் என்றால்*
  *இனி நீ கடவுளின் குழந்தை….*

  *சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்..*’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

  அமைச்சரின் இந்த பதிவுக்கு பலரும் ஆறுதல் தெரிவிக்கும் வண்ணம் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.