‘நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்’ : கமலின் இளையமகள் அக்ஷரா தகவல்!

  0
  8
  நடிகை அக்ஷரா ஹாசன்

  கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் தமிழில் விவேகம் படத்தில் நடித்ததைத்  தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார்

  சென்னை:  கர்ப்பிணி வேடத்தில் நடிக்க என் அம்மாவிடம் பயிற்சி பெற்றேன் என்று நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார். 

  kadaram kondan

  கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் தமிழில் விவேகம் படத்தில் நடித்ததைத்  தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார். விக்ரம் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அக்ஷரா ஹாசன் கர்ப்பிணியாக நடித்துள்ளார்.

  akshara

  இதுகுறித்து சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர்,  இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலை நிறைந்ததாக இருந்தது. எப்போதும் புதுமையை விரும்பவும் எனக்கு இந்த கதாபாத்திரம் கிடைத்ததால் அதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து நான் நடித்துள்ளேன்’ என்றார்.  

  akshara

  தொடர்ந்து பேசிய அவர், கர்ப்பிணி வேடம் என்பதால் ஒவ்வொரு அசைவிலும் அப்படி இருக்க மிகவும் சிரமப்பட்டேன். அதனால் என் அம்மா தான் எனக்கு கர்ப்பிணியாக நடிக்கப் பயிற்சி அளித்தார். அவரின் ஆலோசனையின் படியே நடித்துள்ளேன். நான் கர்ப்பிணியாக மாறி நடிக்க  காரணமே என் அம்மா தான் என்று சொல்லாம்’ என்றார்.