’நான் கர்ப்பமாக இருக்கிறேனா’…பச்சையான ஒரு உண்மையைச் சொன்ன நடிகை சமந்தா…

  19
  சமந்தா

  நடிகை சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது

  விடாது துரத்தும் கர்ப்ப வதந்தைகளுக்குப் பயந்துதான் த்ரிஷா, தமன்னா, நயன் ஆகியோர் திருமணம் செய்துகொள்ளவே பயப்படுகிறார்கள் போல. இதோ திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து ‘கர்ப்பமாக இருக்கிறார்’ வதந்தைகளில் மாட்டித் தவிக்கிறார் நடிகை சமந்தா.

  samantha

  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா.தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது.

  samnatha

  நடிகை சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது.தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வரும் சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 

   

  இந்நிலையில் இது குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சமந்தா, நான் கர்ப்பமாக இருக்கேனா? அந்த நியூஸ் கன்ஃபர்மனா எனக்கும் கொஞ்சம் சொல்லி அனுப்புங்கப்பா’என்று படு கிண்டலாக ட்விட் பண்ணியிருக்கிறார்.மேலும்,  தனது ட்விட்டரில், சமந்தா ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருந்த நிலையில், தான் நடிக்கும் ’ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.