‘நான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்’ : பிக் பாஸ் கவின் உருக்கம்!

  0
  1
   கவின்

  பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்ட்ராகிராம் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

  பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்ட்ராகிராம் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

  kavin

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 12 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  அதில்  கவின் திடீரென்று எதிர்பாராத விதமாக பிக் பாஸ் கொடுத்த ஆஃபர் 5 லட்சத்துடன் வெளியேறினார்.  இதையடுத்து கடந்த  சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், ஹவுமேட்ஸ் மத்தியில் பேசியதோடு, 5 லட்சத்துக்கான காசோலையையும்  வாங்கி சென்றார். 

  kavin

  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், ‘முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதற்கான முதல் காரணமே நான் மிகவும் மோசமான நிலைமையிலிருந்தேன். எனக்கு கொஞ்சம் பணமும், கொஞ்சம் புகழும்  தேவைப்பட்டது. நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் இழந்ததைப்  பெறவே அங்கு சென்றேன். நீங்கள் என்மீது காட்டிய அன்பை எப்படி ஏற்றுக் கொள்கிறோம் அதே அளவு நீங்கள் என்மீது காட்டும் வெறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேனோ அதே அளவு நான் என்னை வெறுப்பவர்கள் குறையும் வகையில் எனது வாழ்க்கையை நான் நன்றாக வாழ்வேன். எனக்கு தற்போது கிடைத்திருக்கும் பிரபலத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை. எனக்கு பிரச்னைகள்  இருக்கிறது. நான் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். பிக் பாஸ்  வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடத்தை  கற்று கொடுத்தீர்கள். இது இதோடு முடியப்போவதில்லை. நான் யாரையாவது  காயப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். 

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  A post shared by Kavin M (@kavin.0431) on

  கவின் பணமோசடியில் சிறையிலிருந்த தனது அம்மாவை சமீபத்தில் ஜாமீனில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.