‘நான் என்ன உங்களவிட வா குண்டா இருக்கேன்?’: கஸ்தூரிடம் எகிறிய வனிதா 

  0
  2
   வனிதா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் சீசன் தொடங்கி 58 நாட்களைக் கடந்துள்ளது. கடந்த வாரம் அபிராமி வெளியேறியுள்ள நிலையில்  இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். 

  இந்த நிலையில் இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் பள்ளி குழந்தைகளாக மாறி கஸ்தூரி ஆசிரியராக மாறியுள்ளார். அப்போது டாஸ்க் சமயத்தில் கஸ்தூரி, வனிதாவைப் பார்த்து வாத்து என்று கலாய்க்க வாக்குவாதம் ஏற்பட்டது. 

  இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த பிரச்சனை குறித்து வனிதா மீண்டும் கிளாரவது போல் காட்டப்பட்டுள்ளது. வனிதா, ‘ஹலோ என்ன சொல்ல வரீங்க? நான் குண்டு சொல்ல வரிங்களா? மூன்று குழந்தைக்கு அம்மா நான். 18 வயதில் பையன் இருக்கிறேன்.

  என்னைப் பார்த்தால் அப்படியா தெரியுதா? அப்படி என்ன நீங்க ஒலியா இருக்கீங்க? என்னைக் குண்டா இருக்கன் சொல்றிங்க? தேவையில்லாமல் இழுத்துவிட்டு இருக்கீங்க’ என்று பேசுவது போன்று புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டிப்பாக இன்றைக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு கலவரம் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.