நான் உண்மையில் நடித்தது அஜித்துடன் தானா? வாய்பிளக்கும் நடிகை வித்யா பாலன்

  0
  1
  வித்யா பாலன்

  நான் அவருடைய தல என்ற பெயரையும், அவரது எளிமையையும் பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் வெட்கப்பட்டார்

  ஒரு பெரிய கூட்டத்தினருக்கு மாஸ் ஹீரோவாக உள்ள நடிகர் அஜித் இவ்வளவு எளிமையாக இருப்பது எனக்கு வியப்பை அளித்தது என்று பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.  

  ajith

  இந்தி திரைப்படமான  பிங்க் திரைப்படம் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில்  தமிழில் ரீமேகாக்கியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அமிதாப் கதாபாத்திரத்தில்  அஜித் நடித்துள்ளார். இவருடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். 

  vidya

  இந்நிலையில் நேர்கொண்ட பார்வை மூலம் தமிழில் கால்பதிக்கும் வித்யா பாலன் படம் குறித்து பேசும் போது, ‘பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் நேர்கொண்ட பார்வை அந்த வாய்ப்பை உங்களுக்கு கொடுக்கும். நான் முதலில் இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க போகிறேன் என்றதும் உற்சாகம் அடைந்தேன். தமிழில் நடிக்கும் முதல் படத்திலேயே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு, எல்லாம் சரியாக நடக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

  ajith

  ஒரு பெரிய கூட்டத்தினருக்கு மாஸ் ஹீரோவாக உள்ள ஒரு நடிகர் இவ்வளவு எளிமையாக இருப்பது எனக்கு வியப்பை அளித்தது. நான் உண்மையில் நடிப்பது அஜித்துடனா? அல்லது அவரை போன்ற வேறொரு நபருடனா ? என்ற கேள்வியை எழுப்பியது. நான் அவருடைய தல என்ற பெயரையும், அவரது எளிமையையும் பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் வெட்கப்பட்டார்’ என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.