நான் இந்துக்களின் எதிரியல்ல, மோடியின் எதிரி: பிரகாஷ் ராஜ்

  0
  3
  pr

  நான் இந்துக்களின் எதிரியல்ல, மோடியின் எதிரி. மத்தியில் ஆளும் மோடியையும் பாஜகவையும் விரட்டுவதுதான் என் முதல் வேலை என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

  பெங்களூரு: நான் இந்துக்களின் எதிரியல்ல, மோடியின் எதிரி. மத்தியில் ஆளும் மோடியையும் பாஜகவையும் விரட்டுவதுதான் என் முதல் வேலை என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

  பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பிரகாஷ் ராஜ், விடு வீடாக சென்று மக்களை சந்தித்து பேசுகிறார். அவர்கள் குறைகளை கேட்டறிகிறார், அவரது பிரச்சாரங்களும் ஆடம்பரமின்றி எளிய முறையில் இருக்கிறது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் மோடியையும் பாஜகவையும் விமர்சித்திருக்கிறார்.

  இதுகுறித்து அவர், “நான் இந்துக்களின் எதிரியல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவையும் மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.